புர்ஜ் கலீபாவில் ஒளிரும் டெல்லி ஏ.ஐ உச்சி மாநாட்டு பதாகை

இந்தியாவின் டெல்லி நகரில் ஏ.ஐ. உச்சிமாநாடு நடை பெற்று வருகிறது.
புர்ஜ் கலீபாவில் ஒளிரும் டெல்லி ஏ.ஐ உச்சி மாநாட்டு பதாகை
Published on

அபுதாபி,

தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) தாக்க உச்சி மாநாடு கடந்த 16-ந்தேதி தொடங்கி, 20-ந்தேதி(இன்று) வரை நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தநிலையில், புர்ஜ் கலீபாவில் டெல்லி ஏ.ஐ உச்சி மாநாட்டு பதாகை ஒளிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் டெல்லி நகரில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தாக்க உச்சி மாநாட்டையொட்டி துபாயில் உள்ள உலகின் உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில் அந்த மாநாடு குறித்த அறிவிப்பு பதாகை மற்றும் பிரதமர் மோடியின் உருவபடங்கள் ஒளிரவிடப்பட்டுள்ளது அங்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

புர்ஜ் கலிபா கட்டிடம் சுமார் 828 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்டு கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com