டெல்டா வகை வைரஸ்: இரண்டே வாரத்தில் தொற்று பரவல் இரட்டிப்பு - அமெரிக்கா

'டெல்டா' வகை தொற்று, மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலேசாகர் டாக்டர் ஆன்டனி பாஸி கவலை தெரிவித்துள்ளார்.
டெல்டா வகை வைரஸ்: இரண்டே வாரத்தில் தொற்று பரவல் இரட்டிப்பு - அமெரிக்கா
Published on

வாஷிங்டன்,

சீனாவின் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. அந்தவகையில் பல நாடுகளில் உருமாறிய வைரஸ் பரவல் காணப்பட்டு வருகிறது.

இந்தியாவிலும் சமீபத்தில் புதிய வகை மாறுபாடு கண்டறியப்பட்டது. இதற்கு டெல்டா என பெயரிடப்பட்டு இருக்கிறது. இது வேறு பல நாடுகளில் பரவி வருவதும் கண்டறியப்பட்டது.

இந்தநிலையில் கொரோனாவின் மற்றொரு மாறுபாடான டெல்டா பிளஸ் தொற்று (ஏ.ஒய்.1) அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த டெல்டா வகை தொற்று, தற்போது அமெரிக்காவிலும் வேகமாக பரவ துவங்கி உள்ளது. புதிதாக பாதிக்கப்படுபவர்களில், 20 சதவீதம் பேருக்கு இந்த வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கைக்கு, இந்த டெல்டா வகை வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

இதுவரை உருமாறிய வைரஸ் வகைகளிலேயே, இந்த டெல்டா வகை அதிக வீரியம் உடையதாகவும், வேகமாக பரவும் தன்மையுடனும் உள்ளது. பாதிப்பு ஏற்படுபவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்கு, தொற்று தீவிரம் உள்ளது. அமெரிக்காவில், இரண்டே வாரத்தில் தொற்று பரவல் இரட்டிப்பாகி உள்ளது.

இந்த உருமாறிய புதிய வகை தொற்றை எதிர்த்து அமெரிக்க தடுப்பூசிகள் செயல்படுவது சற்று ஆறுதல் தர தகவலாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com