தென் ஆப்பிரிக்க அழகி 2017 மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றார்

தென் ஆப்பிரிக்க அழகி டெமி லேக் நெல் பீட்டர்ஸ் 2017 ஆம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றார்.
தென் ஆப்பிரிக்க அழகி 2017 மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றார்
Published on

சமீபத்தில் 2017 மிஸ் உலக அழகியா இந்தியாவின் அரியானவை சேர்ந்த மனுஷி சில்லர் தேர்ந்து எடுக்கபட்டார். உலகின் இரண்டாவது போட்டியான் 66 வது மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டி அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாசில் நடைபெற்றது. இதில் மொத்தம் 92 நாட்டு அழகிகள் கலந்து கொண்டனர்.

இந்தியாவை சேர்ந்த மிஸ் திவா சாந்தா சசிதர், இந்தியா சார்பில் கலந்து கொண்டார். இவர் இறுதி போட்டிக்கு தேர்வான முதல்15 அழகிகள் பட்டியலில் கூட இடம்பெற முடியவில்லை.

மிஸ் யூனிவர்சாக தேர்ந்து எடுகப்பட்ட டெமிக்கு பிரான்சின் ஐரிஸ் மிடேனெரெரால், கிரீடம் சூட்டினார்.

அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஸ்டீவ் ஹார்வி மற்றும் சூப்பர் மாடல் ஆஷ்லே கிரஹாம் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

இந்த போட்டியில் ஜமைக்கா, வெனிசுலா, தாய்லாந்து, மற்றூம் கொலம்பியா ஆகிய நாடு அழகிகள் முதல் 5 இடத்திற்கு வந்தனர். ஜமைக்கன் அழகு டேவினா பென்னட் இரண்டாவது ரன்னர்-அப், கொலம்பிய அழகு லாரா கோன்சலஸ் முதல் ரன்னர்-அப் ஆகவும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்,

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com