அமெரிக்க இடைக்கால தேர்தல்: செனட் சபையை தக்க வைத்தது குடியரசுக்கட்சி

அமெரிக்க இடைக்கால தேர்தலில் செனட் சபையில் பெரும்பான்மை உறுப்பினர்களை குடியரசுக்கட்சி தக்க வைத்துக்கொண்டுள்ளது.
அமெரிக்க இடைக்கால தேர்தல்: செனட் சபையை தக்க வைத்தது குடியரசுக்கட்சி
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க காங்கிரஸ் என அழைக்கப்படும் அமெரிக்க பாராளுமன்றம் செனட் (மேலவை) மற்றும் பிரதிநிதிகள் சபை (கீழவை) என்ற இரு அவைகளைக் கொண்டது. செனட் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஆகவும், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 435 ஆகவும் உள்ளது.

இதில் பதவிக்காலம் முடிவடையும் 435 பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. வழக்கமாக அதிபர் தேர்தலுடன் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும். இந்த முறை அதிபர் தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த தேர்தல் நடைபெறுவதால் இடைக்கால தேர்தல் என ஊடகங்கள் இந்த தேர்தலை குறிப்பிட்டு வருகின்றன. மேலும், பதவிக்காலம் முடிவடையும் 35 செனட் உறுப்பினர்களின் தொகுதிகளிலும், 36 மாநில கவர்னர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில், மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு வாக்களித்தனர். பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன. தேர்தலின் முடிவுகளின் படி, ஜனநாயக கட்சி, பிரதிநிதிகள் சபையையில் பெரும்பான்மையை பெற்றுள்ளது. செனட் சபையை குடியரசுக்கட்சி பெரும்பான்மை உறுப்பினர்களுடன் தக்க வைத்துக்கொண்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com