இலங்கையில் டெங்கு காய்ச்சலுக்கு 74 பேர் பலி

இலங்கையில் டெங்கு காய்ச்சலுக்கு 74 பேர் பலியாகி உள்ளனர்.
இலங்கையில் டெங்கு காய்ச்சலுக்கு 74 பேர் பலி
Published on

கொழும்பு,

இலங்கையில் கடந்த 10 மாதங்களில் மட்டும் 74 பேர் டெங்கு காய்ச்சலால் பலியாகி உள்ளனர். மேலும் 55 ஆயிரம் பேர் காய்ச்சல் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் மட்டும் காய்ச்சலால் 11,854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கம்பாஹா, காலி, சுளுத்துறை, ரத்னபுரா ஆகிய மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.

கடந்த ஆண்டில் இலங்கையில் டெங்கு காய்ச்சலுக்கு 58 பேர் பலியாகி இருந்தநிலையில், இந்த ஆண்டில் 10 மாதங்களுக்குள் 74 பேர் பலியாகி இருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com