டென்மார்க்: ஒமைக்ரான் பாதிப்புக்கு இதுவரை 18 பேர் பலி

டென்மார்க் நாட்டில் ஒமைக்ரான் பாதிப்புக்கு 18 பேர் பலியாகி உள்ளனர்.
டென்மார்க்: ஒமைக்ரான் பாதிப்புக்கு இதுவரை 18 பேர் பலி
Published on

கோப்பன்ஹேகன்,

டென்மார்க் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் ஒமைக்ரான் பாதிப்புகள் முதன்முறையாக கண்டறியப்பட்டன. அதன்பின்னர் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.

இதுவரை நவம்பர் 21ந்தேதி முதல் டிசம்பர் 28ந்தேதி வரையில் மொத்தம் 56 ஆயிரம் பேருக்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் ஸ்டேட்டன்ஸ் சீரம் அமைப்பு ஒமைக்ரான் பாதிப்புகள் பற்றி முதன்முறையாக வெளியிட்டுள்ள செய்தியில், நவம்பர் 21ந்தேதி முதல் டிசம்பர் 28ந்தேதி வரையிலான காலகட்டத்தில் இதுவரை ஒமைக்ரான் தொடர்புடைய உயிரிழப்புகள் 18 ஆக உள்ளன என தெரிவித்து உள்ளது.

இதே காலகட்டத்தில், பிற கொரோனா வகைகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 100 ஆக உள்ளன என்றும் அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com