சீன டிராகன் - இந்திய யானை சண்டை போட கூடாது; நடனம் ஆட வேண்டும் - சீனா விருப்பம்

"சீன டிராகன் மற்றும் இந்திய யானை ஒருவருக்கொருவர் சண்டை போட கூடாது, ஆனால் ஒருவருக்கொருவர் நடனம் ஆட வேண்டும்" என சீன வெளியுறவு அமைச்சர் கூறி உள்ளார். #ChinaIndo #ChineseForeignMinister
சீன டிராகன் - இந்திய யானை சண்டை போட கூடாது; நடனம் ஆட வேண்டும் - சீனா விருப்பம்
Published on

பீஜிங்,

வரும் பாராளுமன்ற தொடருக்கான அவரது வருடாந்தர செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறியதாவது:-

சீனாவும் இந்தியாவும் தங்கள் மன கசப்புகளை குறைக்க வேண்டும். இருதரப்பு உறவுகளை மேம்படுத்த வேண்டும். அரசியல் நம்பிக்கை இருந்தால் இரு நாடுகளுக்கும் நட்பு பரிமாற்றங்களில் இருந்து இமயமலை கூட பிரிக்க முடியாது.

நமது உறவுகளின் எதிர்காலத்திற்கான சீன மற்றும் இந்திய தலைவர்கள் ஒரு அடிப்படை பார்வை ஒன்றை உருவாக்கியுள்ளனர். சீன டிராகன் மற்றும் இந்திய யானை ஒருவருக்கொருவர் சண்டை போட கூடாது, ஆனால் ஒருவருக்கொருவர் நடனம் ஆட வேண்டும்."

"சீனாவும் இந்தியாவும் ஒன்றுபட்டால், ஒன்றும் ஒன்றும் இரண்டுக்கு பதிலாக பதினொன்றாக மாறும். இரு நாடுகளும் மன கசப்புகளை தாண்டி, வேறுபாடுகளை நிர்வகிக்க வேண்டும். சில சோதனைகள் மற்றும் கஷ்டங்கள் இருந்தாலும், இந்தியாவுடன் தொடர்ந்து உறவு வளர்கிறது என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறி உள்ளார்.

இந்தியாவுடனான உறவை காக்கும் வகையில், சீனா அதன் உரிமைகள் மற்றும் சட்டபூர்வமான நலன்களை எடுத்து வருகிறது.

பேச்சுவார்த்தை மூலம் வேறுபாடுகளை நிர்வகிக்கவும், ஒத்துழைப்புடன் ஒரு எதிர்காலத்தை உருவாக்கவும் நாம் சந்தேகத்துக்கு பதிலாக நம்பிக்கையாக மாற்றுவோம் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com