சிங்கப்பூர் அதிபராக பதவியேற்றார் தர்மன் சண்முகரத்னம்..!

சிங்கப்பூரின் 9-வது அதிபராக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்றார்.
சிங்கப்பூர் அதிபராக பதவியேற்றார் தர்மன் சண்முகரத்னம்..!
Published on

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் கடந்த 1-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவருடன் போட்டியிட்ட சீன வம்சாவளி வேட்பாளர்களான கொக் சாங்க் 15.72 சதவீத வாக்குகளும் கின் லியான் 13.88 சதவீத வாக்குகளும் பெற்றனர்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சிங்கப்பூரின் 9-வது அதிபராக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்று கொண்டார். அவருக்கு சிங்கப்பூர் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி சுரேஷ் மேனன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தர்மன் சண்முகரத்னம் இதற்கு முன், சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதிமந்திரி, கல்வி மந்திரி, துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com