

ஹவானா,
கியூபாவின் அதிபராக இருந்தவர் ரால் கேஸ்ட்ரோ (வயது 81). கடந்த 2011ம் ஆண்டு தனது சகோதரர் பிடெல் கேஸ்ட்ரோவுக்கு பின்னர் அதிபராக பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், அதிபர் பதவியில் இருந்து ரால் கேஸ்ட்ரோ இன்று விலகினார். இதனை தொடர்ந்து மிகுவேல் இன்று அதிபராக பொறுப்பேற்று கொண்டார். அதிபருக்கான தேர்தலில் ஒரே வேட்பாளரான மிகுவேல் தேசிய சட்டமன்றத்தில் 604க்கு 603 வாக்குகள் பெற்று தேர்வாகி உள்ளார்.
அவர் 5 ஆண்டு காலம் அதிபர் பதவியில் நீடித்திடுவார். இதனால் 60 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த கேஸ்ட்ரோ சகோதரர்களின் ஆட்சி முற்று பெற்றுள்ளது.