

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. அணு ஆயுதத் திட்டங்களை கைவிட வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தொடர்ந்து பிடிவாதமாகவே இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு கிம் ஜாங் உன்னுடன் பேசுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதிகாரப்பூர்வ தொலைபேசி எண் உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு வழிகள் மூலம் தொடர்பு கொள்ளும் என்றும் வடகொரிய அதிபர் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை என அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கிம் ஜாங் உன் கண்டுகொள்ளாததால், அவருக்கு கடிதம் எழுத டிரம்ப் முடிவு செய்துள்ளார். அந்த கடிதத்தை நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை சபையின் வடகொரிய அலுவலகம் மூலம் ஒப்படைக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி அமெரிக்க அதிகாரிகள் சிலர் வடகொரியா அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த வடகொரிய தூதர் ஒருவரிடம் ட்ரம்ப் எழுதிய கடிதத்தை வழங்கி உள்ளனர். ஆனால், அந்த கடிதத்தை வடகொரிய தூதர் திறந்து கூட பார்க்கவில்லை என்றும் பின்னர் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தின் போது அமெரிக்க பிரதிநிதி முன்னிலையில் அந்த கடிதத்தை வைத்து விட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.