14 கோடி ஆண்டுகளுக்கு முன்பே டைனோசர் வாழ்ந்ததா? அகழ்வாராய்ச்சியில் சிக்கிய எலும்பை வைத்து ஆய்வு

பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஏஞ்சியாக் சரன்டீ நகரில், கடந்த 2010-ம் ஆண்டு முதல் தொல்லியல் ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
14 கோடி ஆண்டுகளுக்கு முன்பே டைனோசர் வாழ்ந்ததா? அகழ்வாராய்ச்சியில் சிக்கிய எலும்பை வைத்து ஆய்வு
Published on

பாரீஸ்,

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த 40-க்கும் மேற்பட்ட உயிரினங்களின் 7,500 படிமங்களை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில் அங்கு ஆராய்ச்சியாளர்கள் வழக்கமான அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டபோது, மண்ணுக்குள் புதைந்து கிடந்த 2 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத தொடை எலும்பு கண்டுபிடிக்கப்பட்டது.

இது 14 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தாவரங்களை உண்ணும் வகையை சேர்ந்த டைனோசரின் எலும்பு என தெரியவந்துள்ளது. 14 கோடி ஆண்டுகளுக்கு முன்பே டைனோசர் வாழ்ந்து இருக்கிறது என்பது வியப்பை அளிப்பதாக உள்ளது.

இந்த டைனோசருக்கு நீண்ட கழுத்து மற்றும் வால் இருந்திருக்கும் என்றும், 40 முதல் 50 டன் வரையிலான எடையில் இருந்திருக்கக்கூடும் என்றும் கூறும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com