

சின்சினாட்டி
உலகின் ஏழாம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் தன்னை எதிர்த்து விளையாடிய ஆஸ்திரேலிய வீரரான நிக் கிர்கியாஸை 6-3, 7-5 என்ற நேர் செட்டுகளில் தோற்கடித்தார். டிமிட்ரோவ்வின் ஆட்டங்களில் இதுவே சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது.
இருபத்தாறு வயதாகும் டிமிட்ரோவ் இதுவரை ஏழு பட்டங்களை வென்றுள்ளார். கிர்கியோஸ் நன்கு விளையாடினாலும், ராஃபேல் நாடாலை காலிறுதியில் தோற்கடித்த போது காட்டிய அத்தனை திறமையையும் காட்டி விளையாடவில்லை. ஆட்டத்தின் கடைசி கேம்களில் அவர் பிரேக் பாயிண்டுகளை எடுத்தாலும் டிமிட்ரோவ் அவரை வென்றெடுத்தார்.