ஏலியன் பெண்ணை திருமணம் செய்து 100 குழந்தைகளை பெற்றேன் அமெரிக்கரின் அதிர்ச்சி தகவல்

டேவிட் ஹக்கின்ஸ் என்ற முதியவர் தான் ஏலியன்ஸ் பெண்ணை திருமணம் செய்து 100 குழந்தைகளை பெற்றுக்கொண்டதாக பேட்டியளித்துள்ளார்.
ஏலியன் பெண்ணை திருமணம் செய்து 100 குழந்தைகளை பெற்றேன் அமெரிக்கரின் அதிர்ச்சி தகவல்
Published on

அமெரிக்காவின் நியூ செர்சி மாகாணத்தில் வசித்து வரும் டேவிட் ஹக்கின்ஸ் 79 என்ற முதியவர் தான் ஏலியன்ஸ் பெண்ணை திருமணம் செய்து 100 குழந்தைகளை பெற்றுக்கொண்டதாக பேட்டியளித்துள்ளார்.

டேவிட் ஹக்கின்ஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ஜார்ஜியாவில் எனது பெற்றோருடன் வசித்து வந்தேன். எனக்கு 8 வயது இருக்கும்போது ஏலியன் பெண்ணுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. எனக்கு 17 வயது இருக்கும்போது எனது ஆண்மையை இழந்துவிட்டேன்.

அவளை நான் கிரசெண்ட் என்று தான் அழைப்பேன், என்னை விண்வெளிக்கு அழைத்து சென்றாள். அவளுடன் நான் வாழந்த வாழ்க்கைக்கு அடையாளமாக 100 குழந்தைகள் பிறந்தது. தற்போது, அந்த குழந்தைகள் அனைவரும் அவளுடன் தான் வசித்து வருகின்றனர்.

டேவிட் ஏலியன் பெண்ணுடன் தான் வாழந்துள்ளேன் என்பதை அனைவரும் எடுத்துரைக்கும் விதமாக, இவரையும் ஏலியன் பெண்ணையும் மற்றும் இவர்கள் சென்ற இடங்களையும் பெயிண்ட்டிங் செய்து வீட்டு அறையில் மாட்டி வைத்துள்ளார். நான் சொல்வது அனைத்தும் உண்மை, என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும், இதனால் இதனை மற்றவர்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது என கூறியுள்ளார்.

தற்போது, இவர் கூறும் தகவல்களை அடிப்படையாக வைத்து ஆவணப்படமாக எடுக்கும் முயற்சியில் இருப்பதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com