

வாஷிங்டன்,
இந்திய வம்சாவளி தொழிலதிபர்களுடன் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
இந்து மதப்பண்டிகையான தீபாவளி இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை நாளை (10ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளி தொழிலதிபர்கள், நிறுவன தலைமை செயல் அதிகாரிகளுடன் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலக அறையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டார்.
இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அனுமன் பாடல்கள் அடங்கிய புத்தகம் டொனால்டு டிரம்ப்பிற்கு பரிசாக வழங்கப்பட்டது.