எங்களுடைய மனவுறுதியை சோதித்து பார்க்காதீர்கள்: அமெரிக்காவுக்கு ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை

மேற்காசிய மோதலால் பல நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன.
எங்களுடைய மனவுறுதியை சோதித்து பார்க்காதீர்கள்:  அமெரிக்காவுக்கு ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை
Published on

தெஹ்ரான்

மேற்காசிய மோதல் தொடர்ந்து 4-வது வாரத்திலும் நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் இன்று கூறும்போது, அமெரிக்காவுக்கு கடுமையான எச்சரிக்கை விடும் வகையில் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், நாங்கள், இந்த பகுதியில் அமெரிக்காவின் அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். தளபதிகள் என்ன செய்கின்றனர். வீரர்கள் செய்யும் தவறுகள், அவர்களால் முடியாத விசயங்கள் என படையினரின் செயல்பாடுகளை பார்த்து வருகிறோம்.

Also Read
நாடாளுமன்றத்திற்கு பதிலாக அரங்கில் அனைத்து கட்சி கூட்டம் ஏன்? மம்தா பானர்ஜி கேள்வி
எங்களுடைய மனவுறுதியை சோதித்து பார்க்காதீர்கள்:  அமெரிக்காவுக்கு ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை

நெதன்யாகுவின் மாயத்தோற்றத்திற்கு உங்களுடைய வீரர்கள் பலியாக நேரிடும். எங்களுடைய பூமியை பாதுகாப்பதற்கான பணியில் உள்ள எங்களுடைய மனவுறுதியை சோதித்து பார்க்காதீர்கள் என எச்சரித்து உள்ளார்.

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கு பதிலடியாக ஈரானும், அமெரிக்காவையும், இஸ்ரேலையும் மற்றும் பிற நாடுகளில் அமைந்த அந்நாடுகளின் படை தளங்களை தாக்கி வருகிறது. இதனால், பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com