உங்களுடைய நாட்டில் பயங்கரவாதிகள் வசிக்கிறார்களா...? நிருபரின் கேள்விக்கு பாகிஸ்தான் மந்திரி அளித்த பதில்

அமெரிக்காவுக்காக, கடந்த 3 தசாப்தங்களாக நாங்கள் இந்த மோசம் வாய்ந்த வேலையை செய்து வருகிறோம் என கூறினார்.
கராச்சி,
பஹல்காமில் சுற்றுலாவாசிகள் 26 பேர் படுகொலைக்கு பின்னர், பதிலடியாக இந்திய ஆயுத படைகள் கடந்த 6-ந்தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை குறி வைத்து தாக்கியது. இதனால் போர் பதற்றம் ஏற்பட்டு, 4 நாட்களுக்கு பின்னர் போர் நிறுத்தமும் ஏற்பட்டது. எனினும், எல்லை பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பி.பி.சி.யின் பாகிஸ்தானுக்கான செய்தியாளர் ஆசாதி மோஷிரி, அந்நாட்டின் பாதுகாப்பு மந்திரி குவாஜா ஆசிப்பிடம் பேட்டி எடுத்துள்ளார். அப்போது அவரிடம், பாகிஸ்தானில் பயங்கரவாத தலைவர்கள் அல்லது பயங்கரவாத குழுக்கள் தீவிர செயல்பாட்டில் உள்ளனரா? என கேட்டார். இதற்கு ஆசிப் இல்லை என உறுதியாக பதிலளித்து உள்ளார்.
இதேபோன்று, 2019 புல்வாமா பயங்கரவாத தாக்குதல், 2016-ம் ஆண்டு உரி தாக்குதல்கள் போன்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னணியில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் தொடர்ந்து அனுமதிக்கிறது என்ற அமெரிக்காவின் நம்பிக்கை பற்றிய கேள்விக்கும் ஆசிப் பதிலளித்து உள்ளார்.
இந்த தாக்குதலில், 59 வீரர்கள் பலியானார்கள். இதுபோன்ற வர்த்தகத்தின் வழியே நிதியை உயர்த்துவதற்காக தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதுபற்றி ஆசிப் கூறும்போது, இவை எங்களுடைய கடந்த கால விசயங்கள்.
1980-ம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான்-சோவியத் போரின்போது, ஆப்கானிஸ்தானிலுள்ள முஜாகிதீன் உள்ளிட்ட சில குறிப்பிட்ட குழுக்களுக்கு சில தசாப்தங்களாக ஆயுதம் வழங்கியதில் அமெரிக்காவுக்கு பெரும் பங்கு உண்டு. அவை பின்னர் பயங்கரவாத குழுக்களாக மறுபிறவி எடுத்தன. இதில், அமெரிக்காவை மறந்து விட்ட நிலையில், பாகிஸ்தான் மீது அந்த சுமை விழுந்து விட்டது.
அவற்றில் ஹக்கானி நெட்வொர்க் உள்ளிட்ட குழுக்களுக்கு, அமெரிக்கா (பாகிஸ்தானும் கூட) ஆதரவளித்தது. அவற்றுக்கு தலீபான், ஜெய்ஷ் மற்றும் லஷ்கர் குழுக்களுடனும் தொடர்பு இருந்தது.
அந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்தனர் அல்லது அவர்களுடைய பயங்கரவாத குழுக்கள் பாகிஸ்தானில் உள்ளனர் என கூறுகின்றனர். அவர்கள் அமெரிக்காவின் கூட்டணியை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பயங்கரவாதிகள் எங்களுடைய கூட்டாளிகள் அல்லது நாங்கள் அவர்களுடைய கூட்டாளிகள் என கூறுவது தொடர்ந்து எங்களை துன்புத்தில் ஆழ்த்துகிறது என்றார்.
பஹல்காம் தாக்குதல் நடந்து 3 நாட்களுக்கு பின்னர், ஸ்கை நியூஸ் என்ற இங்கிலாந்து ஊடகம் அவரிடம், நீங்கள் பயங்கரவாத அமைப்புகளுக்கு பயிற்சி, நிதியுதவி அளிக்கும் நீண்டகால வரலாறு பற்றி கூறுங்கள் என கேட்டபோது, கடந்த 3 தசாப்தங்களாக அமெரிக்காவுக்காக நாங்கள் இந்த மோசம் வாய்ந்த வேலையை செய்து வருகிறோம் என கூறினார்.






