பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை; டாக்டருக்கு 21 ஆண்டுகள் சிறை


பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை; டாக்டருக்கு 21 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 8 Jun 2025 1:51 PM IST (Updated: 8 Jun 2025 5:42 PM IST)
t-max-icont-min-icon

நார்வே நாட்டில் பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டருக்கு 21 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஓஸ்லோ

ஐரோப்பிய நாடான நார்வேயின் டிரோன்ட்ஹெய்முக் நகரைச் சேர்ந்தவர் ஆர்னே பை (வயது 70). டாக்டராக இருந்த அவர் தன்னிடம் சிகிச்சைக்குச் வரும் பெண்கள் பலரை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஆர்னேவை கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து அவர் சிகிச்சை அளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தற்போது நிறைவடைந்த நிலையில் அவர் 80-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. எனவே ஆர்னேவுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

1 More update

Next Story