பிரான்சில் 300 சிறுமிகளை பலாத்காரம் செய்த டாக்டர் - விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்தும், கட்டாயப்படுத்தியும் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
பிரான்சில் 300 சிறுமிகளை பலாத்காரம் செய்த டாக்டர் - விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
Published on

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஜோயல் லே (வயது 74). இவர் தலைநகர் பாரீசில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நல டாக்டராகவும், தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக இருந்து வந்தார். பணியில் இருந்து ஓய்வு பெற்று தனியாக கிளினிக் வைத்து சிகிச்சை அளித்து வந்தார்.

இந்த நிலையில் இவர் அரசு டாக்டராக இருந்தபோது தன்னிடம் சிகிச்சைக்காக வந்த ஏராளமான சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்தும், கட்டாயப்படுத்தியும் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோயல் லேவை கடந்த 2010-ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். 15 ஆண்டுகளாக பாரீசில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். தற்போது விசாரணை அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் ஜோயல் பணியில் இருந்தபோது சுமார் 300-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. மேலும் அவருக்கு மேலும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என அரசு வக்கீல்கள் கேட்டு கொண்டனர். இந்த வழக்கின் தீர்ப்பை கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com