கனடா: பெண்ணின் கல்லீரலில் வளர்ந்த கருவால் மருத்துவர்கள் அதிர்ச்சி

கனடாவில் 33 வயது பெண்ணிற்கு கருவானது அவரது கல்லீரலில் வளர்ந்தது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கனடா: பெண்ணின் கல்லீரலில் வளர்ந்த கருவால் மருத்துவர்கள் அதிர்ச்சி
Published on

ஒட்டாவா,

பிரசவம் என்பது தன் ஒவ்வொறு பெண்ணின் வாழ்க்கையின் முக்கிய தருணமாகும். கரு உருவாகி குழந்தை பிறப்பதற்குள் ஒவ்வொரு பெண்ணும் பல அபாயகட்டங்களை தாண்டவேண்டியுள்ளது.

இப்படி இருக்கும் நிலையில், கனடாவைச் சேர்ந்த 33 வயதான பெண் ஒருவர், அதிகப்படியான மாதவிடாய் இரத்தப்போக்கு காரணமாக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரது உடல்நிலையை சோதனை செய்து பார்த்ததில் அந்த பெண்ணின் கல்லீரலில் கருவானது வளர்ந்து வருவது தெரியவந்தது.

இது இடம் மாறிய கர்ப்பம் என அழைக்கப்படுகிறது. அதாவது கருவுற்ற முட்டையானது கருப்பையில் இல்லாமல் மற்றொரு இடத்திற்கு மாறுதல் அடைவதே இதற்கு காரணமாகும். இதுகுறித்து அப்பெண்ணிற்கு சிகிச்சையளித்த மருத்துவர் கூறுகையில்,

"கல்லீரலில் குழந்தை வளர்வது என்பது மிகவும் அரிதான நிகழ்வாகும். 1964 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை உலகிலேயே 14 பேருக்கு கல்லீரலில் கரு வளர்ந்துள்ளது. சில நேரங்களில் வயிற்று பகுதியில் கூட வளர்ந்ததை பார்த்துள்ளோம். ஆனால் தற்போதுதான் கல்லீரலில் வளர்ந்ததை பார்க்கிறோம். இவ்வகையான கரு வளைவதை பார்ப்பது எனக்கு முதல் முறையாகும். பெண்ணின் உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை மூலம் அந்த கருவானது அகற்றப்பட்டது" என்று அந்த மருத்துவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com