72 மணிநேரம் பெண்ணின் இதயத்துடிப்பை நிறுத்தி வைத்து சாதனை படைத்த மருத்துவர்கள்

சீனாவில் 26 வயது இளம்பெண்ணின் இதயத்துடிப்பு 72 மணிநேரம் நிறுத்திவைக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
72 மணிநேரம் பெண்ணின் இதயத்துடிப்பை நிறுத்தி வைத்து சாதனை படைத்த மருத்துவர்கள்
Published on

சீனாவின் ப்யூஜியான் மாகாணத்தில் 26 வயது மாணவி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததையடுத்து அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் 2 மணிநேரம் அவர் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்டவில்லை. இதனையடுத்து அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன.

இறுதியில் இதயத்தில் உள்ள குழாய் ஒன்றினை துண்டித்து, பின் மீண்டும் ஒட்ட வைக்க மருத்துவர்கள் திட்டமிட்டனர். இதற்காக கிட்டத்தட்ட 72 மணி நேரம் அந்தப் பெண்ணின் இதயத்துடிப்பை நிறுத்தி வைத்து அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது அந்தப் பெண் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com