

இலங்கையின் முன்னாள் பிரதமர் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சவின் மனைவி மற்றும் மகன் ஹெலிகாப்டரில் தப்பிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி மற்றும் அவரது மகன் கேசரா ஆகியோர் இன்று காலை கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவரது மனைவுயுடன் இன்று காலை திருகோணமலைக்கு தப்பிச் சென்று அங்கு தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது நாமல் குடும்பம் தப்பிச் செல்லும் காணொளி வெளியாகியுள்ளது.