

பெர்லின்,
ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற கண்காட்சியில், உலகத்தின் மிகப்பெரும் பணக்காரர்களான எலான் மஸ்க், மார்க் ஜுகர்பர்க், ஜெப் பெசோஸ் உள்ளிட்ட பல்வேறு கோடீஸ்வரர்களின் முகமூடிகள் பொருத்தப்பட்ட நாய் வடிவ ரோபோக்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.
டிஜிட்டல் கலைஞர் பேப்பிள் என்பவர் உருவாக்கியுள்ள இந்த இயந்திர நாய்கள், கண்காட்சி அரங்கில் தனிச்சையாக உலவி வருவதோடு, பார்வையாளர்களை புகைப்படம் எடுத்து அச்சிட்டு வழங்குகின்றன. இந்த விநோதமான முயற்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
முந்தைய காலங்களில் கலைஞர்கள் மாற்றிய உலக பார்வையை இன்று தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களும், கோடீஸ்வரர்களும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்பதை உணர்த்தவே இந்த வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.