நிழல் உலக தாதா ரவி பூஜாரி கைது செய்யப்பட்டதாக தகவல்

நிழல் உலக தாதா ரவி பூஜாரி செனிகல் நாட்டில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
நிழல் உலக தாதா ரவி பூஜாரி கைது செய்யப்பட்டதாக தகவல்
Published on

1990 ஆம் ஆண்டுகளில் மும்பையில் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் என தொடர் குற்றச்செயல்களை நடத்தி வந்த நிழல் உலக தாதா ரவி பூஜாரி, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனிகல் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் ரவி பூஜாரி பதுங்கியிருப்பதாக தகவல் வெளியான நிலையில், செனிகலில் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் கூறுகின்றன.

நவி மும்பையில் உள்ள சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சோட்டா ராஜன் ஆலோசனையின் பேரில் செயல்பட்டு வந்த ரவி பூஜாரி, 2001 ஆம் ஆண்டில் தனியாக செயல்பட துவங்கினார். அவரது கும்பலைச்சேர்ந்த பெரும்பாலானோர் மும்பை போலீசின் சிறப்பு படை பிரிவால் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com