கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; சீன அதிபருடன் டிரம்ப் இன்று ஆலோசனை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாக ஜி ஜின்பிங்குடன் டிரம்ப் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; சீன அதிபருடன் டிரம்ப் இன்று ஆலோசனை
Published on

வாஷிங்டன்,

சீனாவின் உகான் நகரை பிறப்பிடமாக கொண்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை ஆட்டம் காண வைத்த கொரோனா வைரஸ், தற்போது அமெரிக்காவை மிரட்டி வருகிறது. உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா விவகாரம் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் விவகாரத்தில், சீனாவை டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், ஜி ஜின்பிங்குடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com