

புளோரிடா,
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் 2-வது முறையாக போட்டியிட்ட அப்போதைய ஜனாதிபதி டிரம்பை ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தோற்கடித்தார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதற்குப் பிறகு முதல் முறையாக அடுத்த வாரம் புளோரிடாவில் நடைபெறும் கன்சர்வேட்டிவ் அரசியல் நடவடிக்கை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதே நேரத்தில் முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மாநாட்டில் பேசுவதற்கான அழைப்பை மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.