ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம்: காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்


ஏர் இந்தியா விமானத்தில்  பயணிக்க வேண்டாம்:  காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்
x

நவம்பர் 1 முதல் 19ம் தேதிக்குள் ஏர் இந்தியா விமானத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று பன்னுன் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன்,

நவம்பர் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதி குர்பத்வந்த் பன்னுன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீக்கிய இனப்படுகொலையின் 40-வது ஆண்டு நினைவு ஆண்டை முன்னிட்டு ஏர் இந்தியா விமானங்கள் தாக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.

சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பின் நிறுவனரான பன்னுன் கடந்த ஆண்டும் இப்படியான எச்சரிக்கை விடுத்திருந்தார். முன்னதாக கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல்வேறு விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. பின்னர் இவை புரளி என்று தெரியவந்தது. இத்தகைய சூழலில் பன்னூனின் மிரட்டல் வந்துள்ளது.

1 More update

Next Story