இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் அகதிகளாக வேறு நாட்டில் குடியமர்த்துங்கள் - இலங்கை தமிழர்கள் கோரிக்கை

இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் அகதிகளாக வேறு நாட்டில் குடியமர்த்துங்கள் என்றுவியட்நாமில் மீட்கப்பட்ட 303 இலங்கை தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் அகதிகளாக வேறு நாட்டில் குடியமர்த்துங்கள் - இலங்கை தமிழர்கள் கோரிக்கை
Published on

கொழும்பு,

சமீபத்தில், வியட்நாமுக்கும், பிலிப்பைன்சுக்கும் இடையே நடுக்கடலில் ஒரு பெரிய படகு உடைந்தது. அதில், இலங்கை தமிழர்கள் 303 பேர் பயணம் செய்தனர். அவர்களில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். மியான்மரில் இருந்து தஞ்சம் கோரி கனடாவுக்கு சென்று கொண்டிருந்தபோது, இந்த விபத்து நடந்தது. 303 தமிழர்களும் நடுக்கடலில் தவித்தனர்.

தகவல் அறிந்து, வியட்நாம் கடலோர காவல்படை, படகுகளில் விரைந்து வந்தது. 303 பேரையும் மீட்டு, வியட்நாமில் உள்ள வுங் டாவ் துறைமுகத்துக்கு கொண்டு வந்தது. அங்கு அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, 303 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு இலங்கை வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டது. இப்பிரச்சினையை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தது. ஆனால், 303 இலங்கை தமிழர்களும் தங்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என்று அகதிகளுக்கான ஐ.நா. ஆணையருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏதேனும் ஒரு மூன்றாவது நாட்டில் தங்களை அகதிகளாக குடியமர்த்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com