

ஜெனீவா,
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகின்றன. இந்நிலையில், நாட்டில் கொரோனாவின் உருமாறிய புதிய வகை ஒமைக்ரான் பாதிப்புகள் சமீப நாட்களாக அதிகரித்து வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. சமூக பரவல் ஏற்படும்போது, டெல்டாவை மிஞ்சி இதன் பாதிப்புகள் இருக்கும் என்றும் விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ள செய்தியில், கடந்த 16ந்தேதி வரையில் 89 நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த புதிய வகை கொரோனாவானது நாடுகளில் சமூக பரவலாக காணப்பட கூடிய டெல்டா வகையை விட அதிவேக பரவலை கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு 1.5 முதல் 3 நாட்களுக்கு ஒரு முறை இந்த ஒமைக்ரான் பாதிப்புகள் இரட்டிப்படைகின்றன. டெல்டாவை விட ஒமைக்ரான் வகை பெரிய அளவில் வளர்ச்சி அடைவதற்கான உறுதியான சான்று உள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.