பாகிஸ்தான் தேர்தலில் முறைகேடு; தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை- அமெரிக்கா சந்தேகம்

பாகிஸ்தானில் நடந்த தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்று அமெரிக்கா குண்டை தூக்கி போட்டுள்ளது. #PakistanElections2018
பாகிஸ்தான் தேர்தலில் முறைகேடு; தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை- அமெரிக்கா சந்தேகம்
Published on

இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து, தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 272 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் தனிப்பெரும்பான்மை பெற 137 பேர் தேவை.

தற்போது இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக் இன்சாப் கட்சி 113 இடங்களுடன் முன்னிலை வகிக்கிறது. அந்த கட்சி எப்படியும் பெரும்பான்மை பெற்றுவிடும் என்று கூறப்படுகிறது. இதனால் இம்ரான் கான் பிரதமராவது உறுதியாகியுள்ளது.

இம்ரான் கானை, பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ அமைப்பின் குழந்தை என்று அமெரிக்கா கூறியுள்ளது. அவர் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்பட போகிறார். கடைசியாக இருந்த இரண்டு பிரதமர்கள் போல அவர் ஜனநாயகத்தை மதிக்க போவதில்லை. இதனால் அந்நாட்டில் தீவிரவாதம் அரசு அதிகாரத்துடன் செயல்படும் என்றுள்ளது.

இந்த வெற்றி குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். பாகிஸ்தானில் தேர்தல் என்றதுமே, எல்லோருக்கும் இந்த முடிவுதான் வரும் என்று தெரியும். பாகிஸ்தான் தேர்தல் குறித்து, ஏற்கனவே அமெரிக்க உளவுத்துறை தங்களுக்கு தகவல் வழங்கிவிட்டதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

இந்த தேர்தலில் எல்லோரும் பார்க்கும் வகையில் ராணுவம் மூக்கை நுழைத்தது. இம்ரான் கானுக்கு ஆதரவாக நிறைய செயல்களை செய்தது. மறைமுகமாக நிறைய செயல்களை செய்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ராணுவத்தின் வெற்றி மட்டுமே, இதை அமெரிக்கா உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, டிரம்ப் கூறி உள்ளார்.

முக்கியமாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், பாகிஸ்தான் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. அந்த தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை. அங்கு நடத்த விஷயங்கள் எல்லாவற்றையும் நாங்கள் கவனித்து வருகிறோம் என்றுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானிற்கு எதிரான நிலைபாட்டை அமெரிக்கா எடுத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com