”மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டோம்” ஈரான் அதிபர் ரவுகானி

உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு ”மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டோம்” என்று ஈரான் அதிபர் ரவுகானி தெரிவித்துள்ளார்.
”மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டோம்” ஈரான் அதிபர் ரவுகானி
Published on

டெஹ்ரான்,

உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்று ஈரான் அதிபர் ரவுகானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி கூறும்போது, 176 அப்பாவி மக்கள் இறந்த இந்த பேரழிவான தவறுக்கு ஈரான் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது.

எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உடனிருக்கும். என ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். மன்னிக்க முடியாத இந்த தவறு குறித்து சட்ட ரீதியிலான விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com