காங்கோவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 1300 சிறைக் கைதிகள் தப்பி ஓட்டம்

காங்கோவில் ஆயுதமேந்திய குழுவினர் நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் தப்பிச் சென்றனர்.
காங்கோவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 1300 சிறைக் கைதிகள் தப்பி ஓட்டம்
Published on

பெனி

காங்கோவில் பெனி என்ற இடத்தில் உள்ள சிறைச்சாலையில் நேற்று அதிகாலை ஆயுதமேந்திய 100 பேர் கொண்ட கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து சிறையில் இருந்த ஆயிரத்து 300க்கும் அதிகமான கைதிகளை அந்தக் கும்பல் மீட்டுச் சென்றது.

இவர்களில் 20 கைதிகள் மீண்டும் சிறைக்கே வந்துவிட்ட நிலையில் தப்பியோடிய கும்பலையும், கைதிகளையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தப்பிச் சென்ற 14 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். இந்த சோதனையின் போது இரண்டு கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று போலீசார் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

பெனியில் உள்ள இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினென்ட் அந்தோனி மாலுஷே பிபிசியிடம் தப்பிச் சென்ற கைதிகளை பிடிக்கும் நடவடிக்கை நடந்து வருவதாக தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com