காங்கோ முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை விதிப்பு

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
காங்கோ முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை விதிப்பு
Published on

கின்ஷாசா,

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் பல்வேறு கிளர்ச்சி குழுக்களுக்கள் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. கிளர்ச்சி குழுக்கள், பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்புப்படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதனிடையே, காங்கோவில் எம்23 என்ற கிளர்ச்சிக்குழு செயல்பட்டு வருகிறது. இந்த கிளர்ச்சிக்குழுவுக்கு அண்டை நாடான ருவாண்டா ஆதரவு அளித்து வருகிறது.

அதேவேளை, காங்கோவில் 2001 முதல் 2019ம் ஆண்டு வரை ராணுவ ஆட்சி நடைபெற்றது. ராணுவ தளபதி ஜோசப் கலிபா நாட்டின் அதிபராக செயல்பட்டு வந்தார். அதன்பின்னர், அவரது ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து அவர் நாட்டை விட்டு தப்பிச்சென்றார். ஆனாலும், எம்23 கிளர்ச்சிக்குழுவுக்கு ஜோசப் ஆதரவு அளித்து வருகிறார். அவர் சமீபத்தில் எம்23 கிளர்ச்சிக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு ஜோசப் சென்றார்.

இதனிடையே, தனது ஆட்சி காலத்தில் ஜோசப் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேச துரோகம், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், கொலை, பாலியல் வன்கொடுமை, சித்ரவதை, கிளர்ச்சி உள்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக அந்நாட்டு ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஜோசப் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது. அதில், ஜோசப் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதேவேளை, ஜோசப் தலைமறைவாக உள்ளதால் அவரை கைது செய்து தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com