காபி குடிக்கிறீர்களா கர்ப்பிணிகளே? குழந்தைகள் குண்டாக பிறக்கும் வாய்ப்பு அதிகம்: ஆய்வில் தகவல்

காபி குடிக்கும் கர்ப்பிணிகளுக்கு அதிக எடை கொண்ட அல்லது குண்டான குழந்தைகள் பிறக்கும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. #DrinkingCoffee
காபி குடிக்கிறீர்களா கர்ப்பிணிகளே? குழந்தைகள் குண்டாக பிறக்கும் வாய்ப்பு அதிகம்: ஆய்வில் தகவல்
Published on

சுவீடன்,

நம்மில் பலருக்கும் காலையில் தூங்கி எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் கர்ப்பிணிகள் அதிக அளவில் காபி குடிப்பது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் பாதிப்பினை ஏற்படுத்தும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி சுவீடன் நாட்டில் சால்கிரென்ஸ்கா பல்கலை கழக பேராசிரியர் வெரெனா செங்பையீல் தலைமையிலான குழு ஒன்று ஆய்வு நடத்தியது. இதற்காக 50 ஆயிரத்து 943 கர்ப்பிணிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.

உலக அளவில் கர்ப்பிணிகளிடம் மேற்கொண்ட மிக பெரிய சுகாதார ஆய்வில் ஒன்றாக இது கூறப்படுகிறது. அதன்படி, காபியில் அதிகம் காணப்படும் காபீன் என்ற பொருளால் அதனை அதிகம் எடுத்து கொள்ளும் கர்ப்பிணிகளின் குழந்தைகள் அதிக எடை கொண்டவர்களாக அல்லது குண்டானவர்களாக பிறக்க கூடும் என தெரிவிக்கின்றது.

இதனால், குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வயதில் அதிக எடையுடன் இருப்பர். குறைவாக காபீன் எடுத்து கொண்ட தாய்மார்களை விட அதிக காபீன் எடுத்து கொண்டவர்களின் குழந்தைகளுக்கு 5 வயது ஆகும்பொழுது குண்டாகும் சாத்தியம் உள்ளது. அதிக வளர்ச்சிக்கும் இது வழிவகுக்கும் என ஆய்வு தெரிவிக்கின்றது.

எனவே, ஒரு நாளைக்கு 300 மி.கிராம் அளவிற்கு கூடுதலான காபீனை கர்ப்பிணி பெண்கள் எடுக்க கூடாது என சுவீடனின் தேசிய உணவு கழகம் தெரிவித்துள்ளது. இது 3 கோப்பை காபி அல்லது 6 கோப்பை பிளாக் டீ ஆகியவை எடுப்பதற்கு சமம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com