இஸ்லமாபாத்தில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் பறந்த டிரோன்? இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக தகவல்

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் டிரோன் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்லமாபாத்தில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் பறந்த டிரோன்? இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக தகவல்
Published on

இஸ்லமாபாத்,

ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரோன் மூலமாக வெடிகுண்டு போடப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதல் சம்பவத்தில் பெரும் உயிர்சேதம் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதல் சம்பவத்தில் பெரும் உயிர்சேதம் ஏற்படவில்லை.

எனினும், புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இயங்கி வரும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் டிரோன் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரோன் இயக்கம் காரணமாக எழும்பியுள்ள பாதுகாப்பு விதி மீறல்கள் குறித்து பாகிஸ்தானிடம் இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com