ஆப்கானிஸ்தானில் நடந்த வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நடந்த வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 பேர் பலியாகினர். #ISTerrorist #Afghanistan
ஆப்கானிஸ்தானில் நடந்த வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 பேர் பலி
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தான் போரால் சீரழிந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. கடந்த 16 வருடங்களாக தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பொதுமக்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

அந்நாட்டு அரசு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தலீபான் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என முன்வந்தது. எனினும், தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினரும் அந்நாட்டில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஆப்கானிஸ்தான் அரசும் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகளை இலக்காக கொண்டு ஆளில்லா விமானம் நடத்திய வான்வழி தாக்குதலில் அந்த அமைப்பின் தீவிரவாதிகள் 6 பேர் பலியாகியுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com