ரஷியா மீது சரமாரி வான்தாக்குதல்

வான்பரப்பினுள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்ற உக்ரைன் ராணுவ தளவாடங்களை ரஷிய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.
ரஷியா மீது சரமாரி வான்தாக்குதல்
Published on

மாஸ்கோ,

உக்ரைன் மீதான ரஷியா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் இருநாடுகளின் ராணுவமும் தாக்குதலை அதிகரித்து வருவதால் போர் தீவிரம் அடைந்து வருகிறது.இந்தநிலையில் ரஷியாவின் ஆக்கிரமிப்பில் உள்ள கிரீமியா, பெல்கோரட் மற்றும் கிரான்ஸ்னடர் ஆகிய ரஷியா பகுதிகளை குறிவைத்து உக்ரைன் ராணுவம் நவீன ஏவுகணைகளை வீசியும், ஆளில்லா விமானங்கள் அனுப்பியும் தாக்குதல் நடத்தியது.

ரஷியாவின் வான்பரப்பினுள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்ற உக்ரைன் ராணுவ தளவாடங்களை ரஷியாவின் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். அந்தவகையில் 9 ஏவுகணைகள், 61 ஆளில்லா விமானங்களை ரஷியாவின் வான்பாதுகாப்பு தளவாடங்கள் வானில் இடைமறித்து தகர்த்தெறிந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com