‘நெதன்யாகு மீதான ஊழல் வழக்குகளை கைவிடுங்கள்’ - வக்கீல்களுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள்

தன் மீதான வழக்குகள் தவிடுபொடியாகிவிட்டதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
‘நெதன்யாகு மீதான ஊழல் வழக்குகளை கைவிடுங்கள்’ - வக்கீல்களுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள்
Published on: 

ஜெருசலேம்,

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது கடந்த 2019-ம் ஆண்டு 3 வழக்குகளில் லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. தனக்கு சாதகமான செய்திகளை வெளியிடுவதற்காக ஊடக நிறுவனத்திற்கு சலுகை வழங்கியதாகவும், ஹாலிவுட் தயாரிப்பாளர்கள், கோடீஸ்வரர்களிடம் இருந்து விலை உயர்ந்த பரிசுப் பொருட்களைப் பெற்று வரி ஏய்ப்பு செய்ய உதவியதாகவும் நெதன்யாகு மீது குற்றம்சாட்டப்பட்டது.

நீதிபதிகள் அறிவுறுத்தல்

இந்த நிலையில், நெதன்யாகு மீதான லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கைவிடுமாறு, அரசுத் தரப்பு வக்கீல்களுக்கு ஜெருசலேம் மாவட்ட கோர்ட்டு நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.

தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சலுகை வழங்கிய வழக்கில் தண்டனை பெற்றுத் தர வாய்ப்பு குறைவு எனக் கூறிய நீதிபதிகள், மற்ற இரு வழக்குகளையும் மறுபரிசீலனை செய்யவும், சமரசத் தீர்வு காணவும் அறிவுறுத்தியுள்ளனர்.

நெதன்யாகு கருத்து

நீதிபதிகளின் கருத்து பற்றி பேசிய நெதன்யாகு, "என் மீதான வழக்குகள் தவிடுபொடியாகிவிட்டன; விசாரணையை உடனடியாக முடிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ஊழல் வழக்கு காரணமாகவே சமீபத்தில் நடந்த இஸ்ரேல் பொதுத்தேர்தலில் பல கட்சிகள் நெதன்யாகுவுடன் கூட்டணி சேர மறுத்தன. மேலும், குற்றச்சாட்டு உள்ளவர்கள் பிரதமராக முடியாதபடி புதிய மசோதாவையும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன. இந்தச் சூழலில் நீதிபதிகளின் இந்தப் பரிந்துரை அவருக்குப் பெரும் அரசியல் பலத்தைக் கொடுத்துள்ளது.

X