175 ஆண்டுகள் பழமையான இடுகாட்டில் கல்லறை மீது போதையில் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடி


175 ஆண்டுகள் பழமையான இடுகாட்டில் கல்லறை மீது போதையில் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடி
x
தினத்தந்தி 6 April 2025 9:14 PM IST (Updated: 6 April 2025 9:16 PM IST)
t-max-icont-min-icon

1850-ம் ஆண்டை சேர்ந்த பழமையான அந்த இடுகாட்டின் பின்புறம் யாரும் இல்லாத பகுதிக்கு இந்த ஜோடி சென்றுள்ளது.

நியூயார்க்,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வெப்ஸ்டர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் லூக் பிரவுன் (வயது 38). இவருடன் காதலி ஸ்டெபனி கெய் வெக்மேன் (வயது 46) என்பவர் காரில் ஒன்றாக சென்றுள்ளார். அந்த கார் வெக்மேன் மற்றும் அவருடைய கணவரான அந்தோணி ஜான்சன் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

அவர்களுடைய கார் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க இடுகாடு ஒன்றின் முன்பு நின்றிருந்தது. இதனை அந்த வழியே ரோந்து சென்ற போலீசார் பார்த்து காரின் அருகே சென்றனர். காரின் ஜன்னல் கண்ணாடி பாதி திறந்திருந்தது. காரில் யாரும் இல்லை. தொடர்ந்து அதில் சோதனையிட்டதில், மெதம்பிட்டமைன், ஜனாக்ஸ் மற்றும் ஆக்சிகோடோன் போன்ற போதை பொருட்கள் கிடந்துள்ளன.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார் பின்னர் கல்லறையின் உள்ளே சென்று தேடி பார்த்தனர். அப்போது, அதற்குள் அத்துமீறி நுழைந்த வெக்மேன் மற்றும் பிரவுன் ஜோடியை கண்டனர். 1850-ம் ஆண்டை சேர்ந்த பழமையான அந்த இடுகாட்டின் பின்புறம் யாரும் இல்லாத பகுதிக்கு இந்த ஜோடி சென்றுள்ளது.

போதையில் இருந்த அந்த ஜோடி, கல்லறை ஒன்றின் மீது பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளது. வரலாற்று சிறப்பு வாய்ந்த அந்த இடுகாடு 1924-ம் ஆண்டு கடைசியாக உடல்களை புதைக்க பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதன்பின்னர், 2021-ம் ஆண்டு வரலாற்று இடங்களுக்கான தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டு விட்டது.

வெக்மேனுக்கு எதிராக போதை பொருள் தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பிரவுனுக்கு காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

1 More update

Next Story