புதிய விசா கொள்கையின் கீழ் விசா பெற்ற முதல் இந்தியருக்கு துபாயில் உற்சாக வரவேற்பு

துபாயில் உடனடியாக விசா பெற்ற முதல் இந்தியருக்கு, துபாய் சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
புதிய விசா கொள்கையின் கீழ் விசா பெற்ற முதல் இந்தியருக்கு துபாயில் உற்சாக வரவேற்பு
Published on

அமெரிக்க விசா வைத்து இருக்கும் இந்தியர்கள் அமீரகத்தில் தங்க அனுமதிக்கும் வருகை விசாவை நேற்று முன்தினம் முதல் அமீரகத்தின் அனைத்து குடியுரிமை வழங்கல் பிரிவு அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் என்று அமீரக வெளியுவுத்துறை அறிவித்து இருந்தது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இந்தியாவை சேர்ந்த ஒருவர் வருகை விசா பெறுவதற்காக அமெரிக்க விசாவுடன் துபாய் சர்வதேச விமான நிலையம் வந்து இறங்கினார்.

அவருக்கு குடியுரிமைத்துறை அதிகாரிகள் வரவேற்பு அளித்து அமீரகத்தில் தங்க அனுமதிக்கும் வருகை விசாவை வழங்கினர். அமீரக அரசு புதிதாக அனுமதித்த திட்டத்தின் கீழ் விசா பெற்ற முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை குடியுரிமைத்துறை அதிகாரிகள் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த புதிய கொள்கையானது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதாரம், அரசியல் மற்றும் வர்த்தகத்தில் மேலும் முன்னேற்றம் ஏற்படும்.

புதிய விசா கொள்கையின் கீழ் விசா பெற்ற முதல் இந்தியருக்கு துபாய் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரின் புகைப்படத்தை துபாய் வெளியுறவு அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com