குதிரை லாயத்தில் மகனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட துபாய் பட்டத்து இளவரசர்

இங்கிலாந்தில் உள்ள கோடால்பின் குதிரை லாயத்தில் மகனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட துபாய் பட்டத்து இளவரசர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளார்.
குதிரை லாயத்தில் மகனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட துபாய் பட்டத்து இளவரசர்
Published on

மகனுடன் புகைப்படம்

துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் ஓய்வுக்காக இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அவர் அங்குள்ள துபாய் ஆட்சியாளருக்கு சொந்தமான பண்ணை இல்லத்தில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், அவர் கோடால்பின் குதிரை லாயத்தில் உள்ள குதிரைகளை பார்வையிட்டபடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் குளிருக்கு அணியும் ஜாக்கெட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து புகைப்படங்களை எடுத்துள்ளார்.முக்கியமாக கடந்த மே மாதம் பிறந்த அவரது இரட்டைக்குழந்தைகளில் ஒன்றான ஷேக் ராஷித்துடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் கோல்டால்பின் குதிரைலாயத்தில் அயர்லாந்து நாட்டில் பிறந்த அடயார் குதிரையுடன் சேர்ந்து அவர் நிற்பதுபோல பதிவாகி உள்ளது.

அடயாரை வாழ்த்துவதற்காக

கையில் மகனுடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து அவர் பதிவிட்டுள்ள செய்தியில், பயிற்சியும், கல்வியும் விரைவில் தொடங்க வேண்டும். ராஷித்தும், ஷேக்காவும் (இரட்டை குழந்தைகளின் பெயர்கள்) அடயாரை (குதிரையை) பார்க்கவும், வாழ்த்து தெரிவிக்கவும் வந்துள்ளனர் என கூறியுள்ளார். அடயார் என்ற குதிரை தோரோபிரட் ரேஸ்கோர்சில் நடைபெற்ற குதிரை பந்தயத்தில் நடப்பு ஆண்டில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர மேலும் பல்வேறு குதிரைகளுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com