இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் கணவரை விவாகரத்து செய்த துபாய் இளவரசி - வைரல் பதிவு

இருவருமே தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கு முன் பகிர்ந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் கணவரை விவாகரத்து செய்த துபாய் இளவரசி - வைரல் பதிவு
Published on

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகளான ஹைகா மஹ்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "அன்புள்ள கணவருக்கு, நீங்கள் வேறு சிலருடன் உறவில் இருப்பதால், உங்களை நான் விவாகரத்து செய்வதை இதன் மூலம் அறிவிக்கிறேன். நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன். உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் மனைவி." என்று தெரிவித்துள்ளார்.

மஹ்ரா-வுக்கும், அவரது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமுக்கும் கடந்த ஆண்டுதான் திருமணமானது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து இரண்டு மாதங்களே ஆகின்றன. இந்நிலையில், மஹ்ரா கணவரை விவாகரத்து செய்திருப்பது குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மஹ்ராவின் இந்த அறிவிப்பை அடுத்து பலரும் பல்வேறு கருத்துக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அதில், இது மோசமான முடிவு என்றும் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் என்றும் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் உங்கள் முடிவுக்காக பெருமைப்படுகிறேன் என்று பதிவிட்டுள்ளனர். இந்த அறிவிப்பை அடுத்து, இருவருமே தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கு முன் பகிர்ந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளனர்.

மஹ்ரா இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் குறித்த தலைப்பில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், முகமது பின் ரஷித் அரசாங்க நிர்வாகத்தில் கல்லூரி பட்டமும் பெற்றுள்ளார்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com