அமெரிக்காவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு

மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
அமெரிக்காவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு
Published on: 

வாஷிங்டன்,

அமெரிக்காவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று காலை 9.30 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மென்ஹடன் கடற்கரையை மையமாக கொண்டு இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

மென்ஹடன் கடகரையில் இருந்து 4 கிலோ மீட்டர் மேற்கு - தென்மேற்கே 7.6 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. காலை 9.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

X