ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 9.11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
Published on

காபுல்,

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9.11 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 35.281 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 69.737 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

முன்னதாக, கடந்த 28ம் தேதி (நேற்று முன்தினம்) ஆப்கானிஸ்தானில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com