ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ; ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் ரிக்டர் 4.8 அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ; ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.24 மணியளவில் ரிக்டர் அளவில் 5.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

170 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.453 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 70.789 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

இதனை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் 4.8 அளவில் இன்று காலை 8.46 மணியளவில் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com