அர்ஜெண்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அர்ஜெண்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
அர்ஜெண்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Published on

பியூனஸ் அயர்ஸ்,

அர்ஜெண்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். அர்ஜெண்டினாவின் ஜூஜுய் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தற்போது வரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com