

ஜகார்தா,
ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டில் ஆயிரக்கணக்கான தீவுகள் உள்ளன.
இதனிடையே, இந்நாட்டின் பிரோல்ஸ் தீவை மையமாக கொண்டு இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
இந்த நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதன்படி, இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.