நேபாளத்தில் 3 நாட்களில் 3 முறை நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.1 ஆக பதிவாகி இருந்தது.
நேபாளத்தில் 3 நாட்களில் 3 முறை நிலநடுக்கம்
Published on

கிஷ்த்வார்,

இமயமலை பகுதியையொட்டி அமைந்துள்ள இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், காத்மண்டு நகரில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.1 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இதற்கு முன்பு, நேபாளத்தில் நேற்று முன்தினம் காலை 7.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி இருந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 5.18 மணியளவில் மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து இருந்தது.

கடந்த 3-ந்தேதி நேபாளத்தின் மேற்கு பகுதியில் இதேபோன்றதொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் டெல்லி-என்.சி.ஆர். பகுதியிலும் உணரப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com