தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

தஜிகிஸ்தானில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு
Published on

துஷான்பே,

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 3.55 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

28 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 37.16 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 72.28 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த வாரம் வெள்ளிக்க்கிழமை அன்று காலை 8.21 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com