தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு

உலகில் நிலச்சரிவுகள், வெள்ளம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட கூடிய நாடாக தஜிகிஸ்தான் உள்ளது.
தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு
Published on

துஷான்பே

தஜிகிஸ்தான் நாட்டில் இன்று காலை 6.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால், அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது.

உலகில் நிலச்சரிவுகள், வெள்ளம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட கூடிய நாடாக தஜிகிஸ்தான் உள்ளது. இதனால், பாலங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. சாலைகளும் பாதிக்கப்பட்ட கூடிய நிலையில் உள்ளன. போதிய பராமரிப்பின்மை மற்றும் தொடர்ச்சியான இயற்கை பேரிடர்கள் ஆகியவற்றால், அந்நாட்டின் உள்கட்டமைப்பு மெல்ல சீர்குலைந்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com