

பீஜிங்,
சீனாவின் தன்னாட்சி பிரதேசம் திபெத். அதன் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள டிங்கிரி நகரில் நேற்று திடீரென சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவானது.
இது 28.63 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 87.42 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இதில் கட்டிடங்கள் குலுங்கின. பதற்றத்தில் தவித்த பொதுமக்கள் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலைகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் குவிந்தனர்.
எனினும் இந்த நில நடுக்கத்தால் உயிரிழப்போ, பெரும் பொருட்சேதமோ ஏற்பட்டதாக தெரியவில்லை.
மங்கோலியாவில் கோவி அல்டாய் மாகாணத்திலும் நேற்று நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் டாங்கில் சவும் நகருக்கு 30 கி.மீ. தென்கிழக்கில் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கத்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் இல்லை.